நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் நிர்வாகியும், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவருமான தாமஸ் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். தாமஸ், கட்சி பணிகள் மட்டுமின்றி, வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த தாமஸ் பெயரில் தேயிலை தோட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடலூரில் இவர் பிரபலமான தொழில் அதிபராக உள்ளார். இந்த சோதனை எதற்காக நடக்கிறது?, இந்த சோதனையில் பணம், ஆவணங்கள், நகைகள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே அது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.