நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது பிரயோஜனம் இல்லாதது – திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளாசல்…!
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டாணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ப. செந்தில்நாதனை ஆதரித்து, திருச்சி, தென்னூரில் நேற்றிரவு இரவுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது., திமுக அளித்த 513 தேர்தல் வாக்குறுதிகளில் 20 ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. திருப்புமுனையாகத் திகழும் ஊரான திருச்சிக்கு வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யவில்லை. திமுகவுக்கு திருச்சி மக்கள் மீது அக்கறையில்லை.
அதனால் திமுகவுக்கு வாக்களிப்பது பிரயோஜனம் இல்லாதது. நாட்டில் 400 எம்பிக்களைத் தாண்டி வெற்றி பெற்று, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி. திருச்சிக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதனை பிரதமர் மோடி செய்துகொடுப்பார். திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாய்ப்புக் கொடுங்கள். அடுத்த 20 நாள்கள் அவருக்காக நீங்கள் உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்காக அவர் உழைப்பார். தே.ஜ.கூ வேட்பாளர் வெற்றி பெற்றால் திருச்சி வளர்ச்சியடைவது உறுதி. திருச்சியில் நானும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார் அண்ணாமலை. இந்த பிரசாரத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.