மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன். மொத்தம் 3 தொகுதிகள் பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம்..
ரோடு – விஜயகுமார்
ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்
நாளை மறுதினம் (மார்ச் 24) தூத்துக்குடி வேட்பாளர் அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் சின்னம்: இதற்கிடையே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
பாஜக கூட்டணி: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.