Rock Fort Times
Online News

திருச்சி ஜங்ஷன் அருகே ரூ.16 கோடியில் புதிய பாலம்- அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்…!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே ரயில்வே பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக ஏராளமான பஸ்களும், வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்தப் பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது வழிவிட மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த பாலம் மிகவும் பழமை வாய்ந்த பாலம் என்பதால் இதனை இடித்து விட்டு புதிதாக பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.168.34 கோடி நிதியில் ரயில்வே துறையுடன் இணைந்து இரு கட்டங்களாக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவுடன் கிராப்பட்டி, கருமண்டபம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. இந்தப்பாலத்தின் இறுதிக்கட்டப்பணிகள் ராணுவம் (0.633 ஏக்கர் பரப்பளவில்) நிலம் வழங்காததால் நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டு பின்னர் பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு மே 29 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டப் பாலப்பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.16 கோடியில் இதற்கான திட்டப்பணிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இப்பாலம் 770 மீட்டர் நீளம், 13.50 மீட்டர் அகலத்தில் நடை பாதையுடன் மன்னார்புரம் பகுதி, ஜங்ஷன் பகுதி மற்றும் அரிஸ்டோ பகுதிகளை இணைக்கும் வகையில் 3 வழிகளுடன் அமைக்கப்படவுள்ளது. 15 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்