திருச்சி மாவட்டம் சமயபுரம்அருகேயுள்ள சிறுகனூரில் இயங்கிவந்த தனியார் உணவகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்களை நேற்று ( பிப்ரவரி -29 ) இரவு 8 மணியளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிறுகனூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல், மகாதேவன் ஆகியோர் சிறுகனூர் பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றினர். புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக புகையிலைப்பொருட்களை விற்பனை செய்தவர்களை சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.