நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் விஜயசேகரன் மகள் மதிவதனி துவாரகா. திருச்சிக்கு வருகை தந்த பாரத பிரதமரை பார்ப்பதற்காக தனது மகளுடன் வருகை தந்தார் அவர். அப்போது துவாரகா மதிவதனி கோரிக்கை எழுதிய ஒரு பதாகையை கையில் வைத்திருந்தார். அதில் அன்புள்ள மோடி தாத்தா… தான் இரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், எங்கள் ஊர் நாகப்பட்டினம் இங்கு அரசு நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஹிந்தி படிக்க முடியவில்லை. ஹிந்தியுடன் கூடிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு என் அப்பாவிடம் இடம் தர சொல்கிறேன். நீங்கள் பள்ளிக்கூடம் கட்டி தாங்க அதுல நாங்கள் ஹிந்தி கத்துக்கணும் – ஜெய் ஹிந்த் என்று எழுதப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.