உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று ( 09.12.2023 ) இரவு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். கார், நைனிடால் நெடுஞ்சாலையில் சென்ற போது போஜ்புரா என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில் லாரியில் சிக்கிகொண்ட கார், சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது. பின்னர், காரில் தீப்பற்றிக் கொண்டது. இதனால், காரில் இருந்த 8 பேரும் அலறினார்கள். மேலும், கதவைத் திறந்து வெளியே வர முயன்றனர்.
ஆனால், கதவை திறக்க முடியவில்லை. அதற்குள் கார் முழுவதும் தீ பற்றியதால் 8 பேரும் காருக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும், லாரியிலும் தீப்பற்றிக் கொண்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் சென்றபோது தீ பற்றியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் உபி.யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.