Rock Fort Times
Online News

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 – உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…

முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு...

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளவில்லை. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு   ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். புயல் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8 ஆயிரமும். எருது, பசு உயிரிழப்புகளுக்கு ரூ. 37 ஆயிரத்து 500 வரை நிவாரணம் வழங்கப்படும். ஆடுகள் உயிரிழப்புக்கு ரூ.4 ஆயிரமும், சேதமடைந்த படகுகள், வலைகளுக்கு ரூ.50 ஆயிரமும். சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 15 ஆயிரமும், சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ரூ. 1 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரமும், சேதமடைந்த பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 500, பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்