Rock Fort Times
Online News

திருச்சி பிளாஸ்டிக் கம்பெனியில் 14 செல்போன்கள் திருட்டு…

திருச்சி அரியமங்கலம் இ.பி.ரோடு கமலா நேரு நகரை சேர்ந்த ஆனந்தராஜா என்பவர் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். அங்கு 25 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அங்குள்ள கம்பெனி அறையிலேயே தங்கியும் உள்ளனர். சம்பவத்தன்று கம்பெனியில் இருந்த 14 செல்போன்கள் காணாமல் திருட்டுப் போனது. இது குறித்து அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் ஆனந்தராஜா புகார் அளித்தாா் . புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்