Rock Fort Times
Online News

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த பரகத்நிஷா(38) மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 நபர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பரகத்நிஷா, பாலியல் தொழிலில் சிறுமிகளை தொடர்ந்து ஈடுபடுத்த கூடும் என்று கருதப்படுவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோட்டை அனைத்து மகளிர் போலீசார் , திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ்சிடம்  அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் பரகத்நிஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரகத்நிஷாவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது. மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார், அசோக், அபிநிஷா, பானு என்கிற பியாரி மற்றும் பானு ஆகிய 5 பேர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்