Rock Fort Times
Online News

காரல் மார்க்ஸின் 140-வது நினைவு தினம்: கம்யூனிஸ்ட் சார்பில் மலர் அஞ்சலி.

மாமேதை காரல் மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினத்தை யொட்டி இன்று காலை மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலையின் அருகே கார்ல் மார்க்ஸ் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மலைக்கோட்டை பகுதி செயலாளர் பா.லெனின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரங்கராஜன் கொடியேற்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மார்க்கெட் கிளை செயலாளர் சின்னதுரை மற்றும் பழனிவேல், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ரேணுகா மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி மற்றும் பகுதிக் குழு தோழர்கள் ரமேஷ், இளையராஜா, மணிகண்டன், நெடுஞ்செழியன் மற்றும் கிளை செயலாளர்கள் செந்தில், இளங்கோவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்