கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு இருமுடி அணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவர்கள் சபரிமலைக்கு செல்லும்போது கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, மராட்டிய மாநிலம் பன்வெலுக்கு சபரிமலை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நாகர்கோவில் சந்திப்பு – பன்வெல் (வண்டி எண்: 06075) சிறப்பு கட்டண ரெயில் வருகிற 28-ந்தேதி, டிசம்பர் 5, 12, 19, 26-ந்தேதிகள், ஜனவரி 2, 9, 16-ந்தேதிகளில் காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு பன்வெல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
இதேபோன்று மறுமார்க்கத்தில், பன்வெல் – நாகர்கோவில் சந்திப்பு (06076) சிறப்பு கட்டண ரெயில் வருகிற 29-ந்தேதி, டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகள், ஜனவரி 3, 10, 17ந் தேதிகளில் பன்வெல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.