புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கம்மம்பட்டி பாதக்கார தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவர் மணமேல்குடி பகுதியிலிருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்ஸில் வந்தார். பின்னர் விழுப்புரம் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது திடீரென பஸ்ஸிலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.