Rock Fort Times
Online News

திருச்சியில் நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது…

திருச்சி மாவட்டம்  துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் (வயது 22), உலகநாதன் (எ) வடிவேல் (22) என்பது தெரியவந்தது.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை இட்ட போது நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்தது. அதனை அவர்கள் வேட்டைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அதற்கான லைசன்ஸ் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்