Rock Fort Times
Online News

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.84 லட்சம் தங்கம் பறிமுதல்…

2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை

மலேசியாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் இருவரும் 1 கிலோ 350 கிராம் தங்கத்தை கேப்சூல்ஸ் வடிவில் 3 நெகிழி உறைகளுக்குள் அடைத்து உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அந்தக் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 84 லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். அந்தத் தங்கத்தை இவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்