Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு..

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி, மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுலஇந்திரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, மாவட்ட செயலாளர் இன்ஜினீயர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், சிறுபான்மை பிரிவு மீரான், என்ஜினியர் இப்ராம்ஷா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குப்தா, பூபதி, கலைவாணன், நாகநாதர் பாண்டி, முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், நிர்வாகிகள் ஜோதிவாணன், பாலாஜி, இன்ஜினீயர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், ரோஜர், இன்ஜினீயர் ராஜா, வழக்கறிஞா் ஜெயராமன், அக்பர் அலி, வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், பொன்னர், வசந்தம் செல்வமணி, எடத்தெரு பாபு, என்.டி.மலையப்பன், எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், பொன்.அகிலாண்டம், தர்கா காஜா, உறந்தை முத்தையா, அரவானூர் பன்னீர், சுப்ரா, பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், வெல்லமண்டி கன்னியப்பன், சீனிவாசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்