Rock Fort Times
Online News

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதியை கைது செய்ய வேண்டும் – திருச்சியில் அண்ணாமலை பேட்டி …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று ( 06.11.2023 ) சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி, தாயார் சன்னதி மற்றும் அரங்கநாதர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளா் ஸ்ரீரங்கம் கோவிந்தன், தீபக் பட்டா் மற்றும் பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகாலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால், அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி அவமானப்படுத்தியுள்ளார். தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் தொடர்ச்சியாக ஆளுநரையும், என்னையும் தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறார். இவர் மீது தமிழகத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் நாகாலாந்தில் யாராவது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் 153அ என்ற சட்டப்பிரிவில் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கைது செய்து நாகாலாந்து அழைத்துச் சென்றுவிடலாம்.
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும், ராகுல் காந்தியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் செய்து கொண்டிருக்கின்றனர். ஜோதிமணிக்கு தேர்தலுக்கு பணம் கொடுத்தது டி.கே.சிவக்குமார். அந்த பணம் எப்படி வந்தது? யார் மூலம் வந்தது? என்பதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. வேளை வரும்போது இதை விபரமாக சொல்வேன். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை, திமுக ஆட்சியில் தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்