திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் : சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பணிமனை, வேளச்சேரி மற்றும் விஜயவாடா ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி வண்டி எண் : 12606 காரைக்குடி – சென்னை பல்லவன் அதிவிரைவு விரைவு ரெயில் காரைக்குடியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரெயில் இன்று ( 31.10.2023 ) தாம்பரம் சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக வரும் சென்னை – காரைக்குடி ரெயில் வண்டி எண் : 12605 தாம்பரத்தில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும். மேலும் வண்டி எண் : 12636 மதுரை – சென்னை வைகை அதிவிரைவு ரெயில் மதுரையில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரெயில் இன்று தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் : 12635 தாம்பரத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு செல்லும், அதேபோல் வண்டி எண் : 16159 சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் – தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இரவு 11:25 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடிக்கு செல்லும், மேலும் வண்டி எண் : 12653 சென்னை எழும்பூர் – திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12:10 மணிக்கு புறப்படும். இந்த மாற்றம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.