Rock Fort Times
Online News

காா் மீது லாாிகள் அடுத்தடுத்து மோதல் : மருத்துவக் கல்லுாாி மாணவா் உயிா் தப்பினாா்..

நாமக்கல் மாவட்டம் பட்லூர் அடுத்த சாலப்பாளையம் குடித்தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் யுவராஜ்( 29) . இவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 2ம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் சொந்த வேலையாக பெரம்பலூர் வரை செல்வதற்காக  தனது காரை யுவராஜ் ஓட்டி சென்றார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் மேம்பாலத்தின் அருகே   சென்ற போது முன்புறம் சென்ற சிமெண்ட் லாரியை முந்தி செல்ல முயன்றாா். அப்போது  கட்டுப்பாட்டை இழந்த காா் , முன் சென்ற‌ லாரி மீது தோதியது. மேலும்  பின்னால் வந்து கொண்டிருந்த  லாரியும் காா் மீது மோதியது . இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிய யுவராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்