Rock Fort Times
Online News

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை- பதற்றம்…

சென்னை திருவொற்றியூரை அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். திமுக பிரமுகர். இவரது மகன் காமராஜ். இருவரும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வழக்கம்போல காமராஜ் இன்று ( 26.10.2023 )  காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவரது அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தின் உள்ளே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில், பலத்த வெட்டுப்பட்ட காமராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் ?, எதற்காக காமராஜை கொலை செய்தனர்?, ஒப்பந்த பணிகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிறமுகரின் மகன் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்