Rock Fort Times
Online News

“லியோ” திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை…

திருச்சி மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு ...

தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள் அதாவது, காலை 09:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01:30 மணிக்கு முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விதிமீறல்கள் குறித்த புகாா்களை பொதுமக்கள்,

 திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் : 9445000455
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்- 9445461797
லால்குடி வருவாய் கோட்டாட்சியர் -9445000456
முசிறி வருவாய் கோட்டாட்சியர் – 9445000457 ஆகிய தொலைபேசி எண்களில்  தெரிவிக்கலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்