அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கண் அறுவை சிகிச்சை..
திருச்சி மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை பெருமிதம் ...
உலகப் பார்வை தினமானது அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. உலக பார்வை தினம் என்பது கண் ஆரோக்கியம் மற்றும் வழக்கமான கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை மேம்படுத்தியும், உலகெங்கும் உள்ள குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாட்டினை தடுக்கக்கூடிய காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்க, ஒரு தளமாக இந்த நிகழ்வு செயல்படுகிறது. இந்த உலக பார்வை தினத்தன்று ஒரு மகத்தான கண் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை மருத்துவர் ஷிபு வர்க்கி. 64 வயதுடைய மனநிலை சரியில்லாத மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர் கண் பார்வை தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்து இன்று தெளிவான பார்வையை வழங்கியுள்ளார். பல கண் மருத்துவமனைகள் இவரது கண் சிகிச்சையை மேற்கொள்ள தயங்கிய பொழுது சிறப்பான கண் அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளார் டாக்டர் ஷிபு வர்க்கி. மேலும் இந்த கண் சிகிச்சை சிறப்பாக அமைய மயக்க மருந்து மருத்துவர் ராமமூர்த்தியின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த மாபெரும் கண் சிகிச்சையை மேக்ஸி விஷன் குழுமம் வெற்றிகரமாக செய்துள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மருத்துவ இயக்குனர் டாக்டர் ஷிபு வர்க்கி, தமிழ்நாடு, கேரளா துணைத்தலைவர் பெள்ளி ஜி பாபு, சீனியர் லேசிக் சர்ஜியன் டாக்டர் ரோச் ஆரோக்யராஜ் , திருச்சி மேக்சி விஷன் கண் மருத்துவமனை பொது மேலாளர் பீட்டர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.