Rock Fort Times
Online News

திருச்சியில் போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை திருட்டு..!

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை விசுவாஸ் நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி கௌசல்யா (வயது 66).
இருவரும் நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இரட்டை வாய்க்கால் நீர் தேக்க தொட்டி சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் தாங்கள் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர். பிறகு இந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் கழுத்தில் நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். ஒரு பேப்பரில் சுற்றி மடித்து பையில் வைத்து வீட்டிற்கு பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனை நம்பிய கௌசல்யா தனது
7 பவுன் நகையை கழுத்தில் இருந்து கழட்டினார். இதனை பார்த்த 2 மர்ம ஆசாமிகளும் தங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து கவுசல்யாவிடம் நகையை வாங்கி மடித்து மீண்டும் அவரிடம் கொடுத்துள்ளனர். பிறகு மடித்த நகை பேப்பருடன் கௌசல்யா வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் 7 பவுன் நகை இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன்னை திசை திருப்பி போலீஸ் போல் நடித்து 2 மர்ம
ஆசாமிகள் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசில் கௌசல்யா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்