திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவரது மனைவி சிவகாமி (60). இவர்களுக்கு செந்தில், தினேஷ் (36) என்ற 2 மகன்கள். மூத்த மகன் செந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவர் குணமடையாததால் விரக்தி அடைந்த மோகன், மனைவி மகன் ஆகியோருடன் நேற்றிரவு வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மோகன் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு 3 பேரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.