திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போயின. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் 80 செல்போன்களை மீட்டுள்ளனர். அதனை உரியவர்களிடம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் ஒப்படைத்தார். பின்னர் அவர்
செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி மாநகர பகுதிகளில் காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்கள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் 130 பேரின் செல்போன்கள் மீட்கப்பட்டன. இதில் 80 நபர்களை வரவழைத்து இன்று நேரில் செல்போன்களை ஒப்படைத்துள்ளோம். செல்போன்கள் திருடு போனாலோ அல்லது காணாமல் போனாலோ அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கும் பட்சத்தில் செல்போன்களை ட்ராக் செய்து அதனை மீட்க முடியும்.
சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் புதிய ஆப் வாயிலாக சுமார் 200 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். இதனை திருச்சியிலும் அப்ளை செய்ய முயற்சி செய்து வருகிறோம். அப்பாவி பொதுமக்களை குறி வைத்து
போன் செய்து ஓடிபி கேட்டு ஏமாற்றும் சம்பவம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஆனால், லிங்கை அனுப்பி ஒரு டாஸ்கை கொடுத்து 30 முதல் 40 வயது உள்ளவர்களை ஏமாற்றும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.