திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய 22 நபர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். அந்த வகையில் மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த பி.சிவசங்கர் வருவாய் அலுவலராகவும், உதவியாளர் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த எஸ்.மாலதி, க.சரவணன், பி.யோகாம்பாள், அ.சிராஜூனிசா, ம.ஜெயராஜ், ஆர்.சத்தியமூர்த்தி, ஜெ.புனிதவள்ளி, ஆர்.மாசிலாமணி, எஸ்.முரளி, கே.ரமேஷ், க.பிரபாகர் ஆகிய 11 போ் கண்காணிப்பாளா்களாகவும், இளநிலை உதவியாளர் பணியிடத்தில பணிபுரிந்து வந்த பி.ராகினி , ஜெ.ஞானசேகர், பு.ரேணுகாதேவி, செ.கார்த்திக், ஆ.குமார், என்.கண்மணி, எஸ்.உதயபானு, லெ.பிரதீபன், ரா.மாரிமுத்து, கி.ரமேஷ் ஆகிய 10 போ் உதவியாளர்களாகவும் பதவி உயர்வு பெற்றனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.