தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை ( 06.10.2023 ) காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் காரில் தஞ்சை மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் நாளை மாலை 6.30 மணியளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வரின் வருகை காரணமாக நாளை அவர் பயணம் செய்யும் சாலைகள், திருச்சி விமான நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.