Rock Fort Times
Online News

திருச்சி ஹோட்டல்களில் அதிரடி சோதனை: 90 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்…

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி சிறுமி உயிர் இழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களில் சோதனை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மாநகரில் சாஸ்திரி ரோடு மற்றும் தில்லை நகர் பகுதிகளில் உள்ள பிரபல ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 6 கடைகளில் கெட்டுப் போன 90 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

 

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறுகையில், ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகள் மூலம் உணவு சமைத்து விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்களும் எங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்