நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் வினோ பாரதி. இவா் நேற்று அலுவலக வேலையின் காரணமாக வினோ பாரதி தனது வீட்டின் அருகே உள்ள மணிரத்தினம் என்பவரை கார் ஓட்டுனராக கொண்டு தனது காரில் இருவரும் சென்னை சென்றுள்ளனர். அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே நள்ளிரவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் உள்ள சாலையில் தடுமாறி சென்று எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிரத்தினம் மற்றும் வினோ பாரதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த படாளம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடர்ககூறாய்விற்க்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
1 Comment
Leave A Reply

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.