திருச்சி காவிரி பாலம் அருகே மாநகராட்சியின் சார்பில் ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் உள்ளது. இங்கு , பிரேதங்கள் நவீன முறையில் எரியூட்டப்படுகின்றன. இங்கு சில பழுதுகள் ஏற்பட்டதால் கடந்த 30.08.2023 முதல் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் நேற்று வரை செயல்பாட்டில் இல்லை. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதால் இன்று ( 08.09.2023) முதல் இந்த எரியூட்டும் மையம் செயல்பாட்டுக்கு வருகிறது என்று மாநகராட்சி சார்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.