Rock Fort Times
Online News

திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1.47 கோடி மோசடி….

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் சடகோபன். இவரது மனைவி சாந்தா (வயது 75). கணவர் இறந்து விட்ட நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வங்கி கணக்கில் ரூ.90 லட்சம் இருந்துள்ளது.  இதனை அறிந்து கொண்ட அவரது சகோதரர் மகள், மகன் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து தனியார் வங்கிக்கு அந்த பணத்தை மாற்றினால் கூடுதல் வட்டி கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், வங்கி கணக்கை மாற்ற ஒப்புக்கொண்டார். அப்போது அவர்கள் போலி கையெழுத்திட்டு அந்த பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர். மேலும் மூதாட்டியின் நகை, பணம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உறையூர் போலீசில் சாந்தா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்