திருச்சி நந்தி கோவில் தெருவில் இருந்து வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் ரோட்டில் பாத்திர கடை உள்ளது. இன்று (04.09.2023) அதிகாலை இந்த கடையின் ஷட்டரில் வாலிபர் ஒருவர் லுங்கியால் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.