Rock Fort Times
Online News

அமைச்சா் உதயநிதி பேச்சுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. ஆதரவு….

திருச்சி விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சனாதனம் என்றால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் என்று தான் அர்த்தம். அந்தவகையில் உதயநிதியின் கருத்திற்கு நான் உடன்படுகிறேன். நானும் கோவிலுக்கு செல்கிறேன். கோவிலுக்கு செல்வதற்கும் சாமி கும்பிடுவதற்கும், சனாதனதிற்கும் என்ன சம்மந்தம். பாஜக தலைவர் அண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது சனாதனத்தை பின்பற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தார்களா..? சனாதனத்திற்கும் சாமி கும்பிடுவதற்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்