Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர்  கைது….

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ்  உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் அதிரடி வேட்டையில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்