Rock Fort Times
Online News

 பட்டமளிப்பு விழா நடத்தப்படாததை கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. அதன் காரணமாக சுமார் 2 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தாதற்கு காரணம் ஆளுநர் தேதி வழங்காதது தான் என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பாக பட்டம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 30ம் தேதிக்குள் பட்டமளிப்பு விழா தேதியை அறிவிக்காவிட்டால் அடுத்த கட்டமாக பல்கலைக்கழகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்