Rock Fort Times
Online News

கோவில் திருவிழாவில் பட்டாக்கத்தியுடன் திரிந்த ரவுடிக்கு வலைவீச்சு…. தடுக்க தவறிய போலீசாரிடமும் விசாரணை…

சென்னை கே.கே. நகர் பகுதியில் நேற்று இரவு கோவில் திருவிழா நடந்தது. அப்போது சரித்திர பதிவேடு குற்றம் சாட்டப்பட்ட அபிஷேக் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கையில் பட்டாகத்தியை வைத்துக்கொண்டு சாலையில் உரசியவாறு அங்குமிங்கும் சுற்றுத் திரிந்ததோடு நடனம் ஆடினர். அப்போது கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சென்னை போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலை வலை வீசி தேடி வருவதோடு பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்