Rock Fort Times
Online News

தமிழக தர்காக்கள் பேரவை நடத்திய மிலாடி நபி பேரணி…* திருச்சியில் அமைச்சர் பர்வேஸ் முகமது தலைமையில் நடைபெற்றது..! 

தமிழக தர்காக்கள் பேரவை நடத்திய மிலாடி நபி பேரணி…

 

* திருச்சியில் அமைச்சர்

பர்வேஸ் முகமது தலைமையில் நடைபெற்றது !

இஸ்லாம் மதத்தின் புனித தூதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மிலாடி நபியாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் நபிகள் நாயகத்தின் போதனைகள், அன்பு, மற்றும் நல்வழிப்படுத்திய வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்து இந்நாளில் சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் பேரணிகள் ஆகியவற்றை நடத்தி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், திருச்சியில் தமிழ்நாடு தர்காக்கள் பேரவை இணைந்து நடத்திய ஒற்றுமை பேரணி அமைச்சர் பர்வேஸ் முகமது தலைமையில் இன்று(26-08-2026) நடைபெற்றது. திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய இப்பேரணி, காந்தி மார்க்கெட்டில் நிறைவடைந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், ஒற்றுமையை வலியுறுத்தியும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தமிழ்நாடு தர்காக்கள் பேரவையின் நிர்வாகிகள், திருச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க பொறுப்பாளர் தர்கா எஸ்.சௌகத், திருச்சி மாநகர த.வெ.க பிரமுகர்களான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், என்.ஜவகர், முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன், குடமுருட்டி கரிகாலன், வக்கீல் திலீப்குமார், பகுதி செயலாளர்கள் காந்தி மார்க்கெட் எல்.கௌதமன், பாலக்கரை ரா.சி. சூர்யா, ஏர்போர்ட் சி.வெள்ளைச்சாமி, மலைக்கோட்டை கி.சதீஷ்குமார், பாலக்கரை சிவக்குமார், காந்தி மார்க்கெட் ஏ.டர்க்கிஸ், மலைக்கோட்டை எம்.கணேஷ் குமார், சிந்தாமணி எம்.ஜீவானந்தம் மற்றும் மாநகர, பகுதி, வட்ட, கிளைக்கழக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்