Rock Fort Times
Online News

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடியவர் சாலையில் பிணமாக கிடந்த பரிதாபம் …!

திருச்சி பொன்னகர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ் (வயது 47 ). சம்பவத்தன்று இவர் தனது உறவினர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்த சுரேஷ், புகாரை வாபஸ் வாங்குமாறு உறவினரை சந்தித்து கூறியுள்ளார். மேலும், விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தென்னூர் தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகில் மயங்கி கிடந்தார். மீண்டும் அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்