திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று ( 24.08.2023 ) திருச்சி வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் , சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் , திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் என். காமினி ஐபிஎஸ், காவல்துறை கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், துரை.சந்திரசேகர், நீலமேகம், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் கே. வைரமணி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் , தொண்டர்கள் பங்கேற்றனா்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் கும்பகோணம் செல்கிறார். மாலை தருமபுர ஆதீன கல்லூரி விழாவில் பங்கேற்கிறார். நாளை திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிறகு, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 26-ம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 27-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சாலை மார்க்கமாக திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.