திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள பிஷப் ஹீபர் பள்ளியில் பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசுசிகரன், திருச்சி மாநகராட்சி மண்டலம்_2 கோட்டத்தலைவர் ஜெயநிர்மலா, வட்டச் செயலாளர் இளங்கோ மற்றும் உதயா ரஃபி, திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி மு.க. முகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.