Rock Fort Times
Online News

மணப்பாறையில் பேராசிரியர் வீட்டில் 14 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் கொள்ளை…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெஸ்டோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கவரப்பட்டிக்கு சென்றிருந்தார். இன்று ( 23.08.2023 ) காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதேபோல் பெஸ்டோ நகர் அருகே உள்ள காட்டுப்பட்டி காமராஜர் நகரில் முத்துப்பாண்டி என்பவர் வீட்டின் முன்பக்க கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பிரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை, வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்