Rock Fort Times
Online News

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் 24-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்து தி.மு.க. நேற்று ( 20.08.2023 ) நடத்திய உண்ணாவிரத போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றதாலும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் மட்டும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவில்லை. இதனால் மதுரையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்