சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்தநிலையில் இன்று ( 21.08.2023 ) காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில், அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.