திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட இளைஞரணி, மாணவர்அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்துசெய்ய மறுக்கும் மத்திய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி நாளை ( 20.08.2023 ) காலை 8 மணியளவில் திருச்சி ரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த அறப்போராட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், செயல் வீரகள், தொண்டர்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.