திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் புலியூர் சிங்கவலம் ரோடு பகுதியைச் சேர்ந்த குமார் என்கின்ற சுகுமார் (வயது 40) அடைக்கப்பட்டுள்ளார். இவரை வழக்கு விசாரணைக்காக தஞ்சை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்த நிலையில் அவரை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர் உடலுக்குள் மறைத்து வைத்திருந்த 13 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்கு போதை மாத்திரைகள் எப்படி கிடைத்தது?, யார் கொடுத்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.