Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஆய்வு …

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று ( 19.08.2023 ) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். மாநகர பேருந்துகள் நிற்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் துர்காதேவி, செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ச.நா. சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்