சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கரூர் ராம்நகரில் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 கார்களில் வந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டில் வேலை செய்து வரும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.