Rock Fort Times
Online News

திருச்சியில் 55 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலானோர், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 55 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை   திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்