தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து அவற்றை நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.