Rock Fort Times
Online News

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் ஆலோசனைகளின் படி இன்று ( 09.10.2023 ) ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அத்துடன் மற்ற மாநிலங்களிலும் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என 2 கட்டமாகவும், தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறுகிறது.  5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்